Tuesday, February 16, 2010
நீ என்னை பார்த்தாலே என் மனதில்காதல் தீ பற்றி எரிகிறது.உன் சிரிப்பில் ஒரு கனப்பு தெரிகிறதுஎன் நடுக்கம் குறைகிறது.நீ என்னை கடந்து செல்லும் போதுதென்றல் என்னை வருடிச் செல்கிறது.மெலிதான உன் வாசனை நுகர்ந்தாலேமனம் தட்டுகெட்டு அலைகிறது. நீ பேசும் வார்த்தைகள் காதில் விழுகிறதுஅது இசை என்று என் காதல் சொல்கிறது.உன்னுடன் பேச நினைக்கும்போது மட்டும்தொண்டை அடைக்கிறது நெஞ்சு கரிக்கிறது.காதலின் விளைவுகளோ இவை....




0 comments:
Post a Comment