பார்த்தேன்...ரசித்தேன்...

Wednesday, February 17, 2010


பௌர்ணமி நிலவைப் பார்த்தேன்;
உன் முகத்தை கண்டு ரசித்தேன்.
அதன் பின்னணியில் கார்மேகத்தை பார்த்தேன்;
உன் கூந்தல் கண்டு ரசித்தேன்.
மின்னல் பளிச்சிடுவதை பார்த்தேன்;
உன் விழிகளை கண்டு ரசித்தேன்.
தோட்டத்து ரோஜா மலர்வதை பார்த்தேன்;
உன் இதழ் கண்டு ரசித்தேன்.
மலர் மனம் வீசுவதை நுகர்ந்தேன்;
அதில் உன் வாசம் உணர்ந்து கிறங்கினேன்.
ஒன்று சொல் பெண்ணே,
உன்னை மனதை நான் பார்க்கையில்
அதில் என்னைக் கண்கொண்டு ரசிப்பேனா..?

2 comments:

goma said...

பார்த்தேன் ரசித்தேன்
வாசித்தேன் வியந்தேன்...
பாராட்டுகள்...நிறைய எழுத வாழ்த்துக்கள்

சிவசுப்பிரமணியன் said...

mikka nanri goma