மீள் நினைவுகள்

Saturday, August 19, 2017


கடந்து போன காதலும்,
கருகிய கனவுகளும்,
நெஞ்சில் புதைத்த
நீங்கா நினைவுகளும்,
மறைத்த கண்ணீரும்,
மறந்து போன வாக்கும்,
உன்னைப் பற்றி கேட்கையில்
உயிரோலமிட்லெழுந்து,
நீ இல்லாத என் வாழ்வின்
நிதர்சனத்தை சொல்கின்றன;
எவரேனும் உன்னைப் பற்றி
கேட்கும் போது.
.
.
.
ஒவ்வொருமுறையும்
மீறியெழும் எண்ணங்களை
மறைத்துக்  கொண்டு.

ஈரம் பிடித்திருக்கிறது... மழையிலும்... வியர்வையிலும்....4

Friday, February 13, 2015


கண்ணுக்கு தெரியாமல்
உடையை உடலோடு
இணைக்கும் மழைத்துளி போல
உன்னையும் என்னையும்
இணைக்கிறது
நம் காதல்..
.
.
.
.
ஈரம் பிடித்திருக்கிறது... மழையிலும்... வியர்வையிலும்...

ஈரம் பிடித்திருக்கிறது... மழையிலும்... வியர்வையிலும்....3


இடி இடிக்கும் போது
என் நெஞ்சோடு சேர்ந்து
தஞ்சமடைகிறாய்...
ஆனால்.. உன்
மெல்லிய கதகதப்பிலும்
வியர்வை வாசனையிலும்
உன்னிடம் தஞ்சமடைவது
நான்தான் என்பது
உனக்கு தெரியுமா?
.
.
.
.
ஈரம் பிடித்திருக்கிறது... மழையிலும்... வியர்வையிலும்...

ஈரம் பிடித்திருக்கிறது... மழையிலும்... வியர்வையிலும்...2


உன் வியர்வை  துடைக்க
நான் முயல்கையில்
வெட்கப்படும் உன் மேல்,
அங்குல இடம் விடாமல்
படரும் மழை சாரலுக்கு
கிடைத்த வரம்
எனகேப்போது கிடைக்கும் சொல்லடி
என் காதலி..
.
.
.
.
ஈரம் பிடித்திருக்கிறது... மழையிலும்... வியர்வையிலும்

ஈரம் பிடித்திருக்கிறது... மழையிலும்... வியர்வையிலும்....1


இந்த மழை இரவில்
உன்   கரம் பற்றிய போது
உன் மேலுதட்டின் வியர்வையும்,
வெளியில் பெய்த மழையும் ,
பிடித்திருக்கிறது.
.
.
.
.
ஈரம் பிடித்திருக்கிறது.. மழையிலும் .. வியர்வையிலும்..

நானெங்கே?

Friday, October 05, 2012

காதல்..காதல்.. காதல்
என்று அலைந்த நானெங்கே?
தெவதைகளின் நினைவுகளில்
வாழ்ந்த நானெங்கே?
மழையிலும் வியர்வையிலும்
மயங்கிய நானெங்கே?
பார்வையில் பட்டதையெல்லாம்
கவிதையாக்கிய நானெங்கே?
கடமையிலும் கனினியிலும்
கவிதையை தொலைத்த‌
நான் மட்டும் இங்கே...
என்னுள் இருந்த நானெங்கே?

நிற்க

Saturday, March 12, 2011


காதலியே
கவிதையாக நிற்கும் போது
எழுத வார்த்தைகளற்று
திகைக்கிறேன்